அரவைக்காக 4,000 டன் நெல்
நாகையில் இருந்து விருதுநகர், திருச்சி மாவட்டங்களுக்கு அரவைக்காக 4 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகையில் இருந்து விருதுநகர், திருச்சி மாவட்டங்களுக்கு அரவைக்காக 4 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
அரவைக்காக
சம்பா அறுவடை முடிந்தவுடன் விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு நாகை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டது. இவ்வாறு சேமித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
4 ஆயிரம் டன் நெல்
அதன்படி நேற்று விருதுநகர், திருச்சி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பதற்காக லாரி மூலம் நாகை ெரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நெல் மூட்டைகளை லாரியில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் 42 வேகன்களில் ஏற்றினர். இதையடுத்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் விருதுநகர் மாவட்டத்திற்கும், 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் திருச்சி மாவட்டத்திற்கும் அரவைக்காக சரக்கு ெரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story