அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் ஆய்வு


அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Aug 2021 10:43 PM IST (Updated: 25 Aug 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் ரெயில் நிலையம், தெற்கு ரெயில்வே மருத்துவமனை, ஒட்டுனர்கள் ஒய்வு அறை உள்ளிட்ட இடங்களில் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு நடத்தினார்.

அரக்கோணம்

அரக்கோணம் ரெயில் நிலையம், தெற்கு ரெயில்வே மருத்துவமனை, ஒட்டுனர்கள் ஒய்வு அறை உள்ளிட்ட இடங்களில் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு நடத்தினார்.

கோட்ட மேலாளர் ஆய்வு

அரக்கோணம் ரெயில்நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு செய்தார். அப்போது ரெயில் நிலைய நடைமேடை, ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடம், சிக்னல் அறை, ெரயில் கட்டுபாட்டு அறை, ரெயில் ஒட்டுனர்கள், கார்டுகள் ஒய்வறைகளை பார்வையிட்டார். பின்னர் ரெயில்வே மருத்துவமனையை பார்வையிட்டு மருத்துவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனையடுத்து மேல்பாக்கம் துணை மின் நிலையத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை

கோட்ட மேலாளர் கணேஷிடம் தணிகைபோளூர் கிராம மக்கள், அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் மற்றும் பா.ஜ.க.வினபர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அரசின் வழிகாட்டுதலை ஏற்று அனைத்து வகையான ரெயில் பயணிகளையும் நேர கட்டுப்பாடின்றி பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்து விரைவு ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் பயணிகள் பயணிக்க சாதாரண பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 எழும்பூரிலிருந்து மும்பை தாதருக்கு தினமும் சென்று கொண்டிருக்கும் விரைவு ரெயிலை அரக்கோணத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும், அரக்கோணத்திலிருந்து ஜோலார்பேட்டைக்கு மாலையில் இயக்கப்படும் மின்சார ரெயிலை சித்தேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும், இச்சிபுத்தூர் ரெயில் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர். 

Next Story