திருப்பூர் மாவட்டத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
x
தினத்தந்தி 25 Aug 2021 10:46 PM IST (Updated: 25 Aug 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பொழுதுபோக்கு பூங்காக்கள் 
திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். இந்த விடுமுறை தினத்தில் திருப்பூர் மாவட்டத்தின் அருகில் உள்ள மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். 
குடும்பத்துடன் திருப்பூரில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் தொலைதூர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கிற தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று பொழுதுபோக்கும் வகையில் மாநகரில் 20-க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. 
சுத்தம் செய்யும் பணி 
இதில் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் பலரும் சென்று வருவார்கள். இதற்கிடையே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்கள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 
தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் மீண்டும் பூங்காக்கள் திறந்து செயல்பட தமிழக அரசு கடந்த தளர்வின் போது அனுமதி வழங்கியுள்ளது. 
இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்களை திறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல மாதங்களாக மூடப்பட்டிருந்ததால் பூங்காக்கள் சுத்தம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story