திருப்பூர் மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.

திருப்பூர் மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.
x
தினத்தந்தி 25 Aug 2021 10:53 PM IST (Updated: 25 Aug 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.

திருப்பூர்
திருப்பூர் மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.  
விளம்பர பதாகைகள் 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பதாகைகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுபோல் விளம்பர பதாகைகளின் காரணமாக சிலர் பலியாகியும் உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 
தொழில் நகரமான திருப்பூரில் திரும்பும் திசையெங்கும் விளம்பர பதாகைகள் மற்றும் ஆட்கள் தேவை போன்ற பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். 
அகற்றம் 
அதன்படி மாநகரில் 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டல அதிகாரிகளுக்கும் தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். போக்குவரத்து இடையூறாக இருந்த மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அந்த வகையில் திருப்பூர் மாநகரில் 245 பதாைககள் அகற்றப்பட்டன. மேலும், இதனை மீறி விளம்பர பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த நடவடிக்கையின் காரணமாக நேற்று மாநகரில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story