ஆண்டாள் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் பவித்ர உற்சவ நிகழ்ச்சி கடந்த 18-ந் தேதி தொடங்கியது. இந்த உற்சவ நிகழ்ச்சியில் பெரிய பெருமாளுக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மஞ்சள் நிற மாலை அணிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று பவித்ர உற்சவம் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கருட வாகனத்தில் பெரிய பெருமாளும், அன்ன வாகனத்தில் பெரியாழ்வாரும் மஞ்சள் நிற மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story