கொரோனா தடுப்பூசி முகாம்
ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தினமும் 60 முதல் 80 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்தவர்களும் பதிவு செய்யப்படாதவர்களுக்கு மருத்துவமனையிலேயே பதிவு செய்து தரப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டனர். இதுகுறித்து தலைமை மருத்துவர் பாபுஜி கூறுகையில், தற்போது தடுப்பூசி தடையின்றி வந்து கொண்டு இருப்பதால் தினமும் 60 முதல் 80 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் காலையில் 9 மணிக்கு வந்து பதிந்து விட்டு 10 மணிக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story