பெண்களை கேலி செய்தது பற்றி போலீசில் புகார் அளித்தவர் படுகொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருேக பெண்களை கேலி செய்தது பற்றி போலீசில் புகார் அளித்தவர் படுகொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த அவருடைய மைத்துனருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருேக பெண்களை கேலி செய்தது பற்றி போலீசில் புகார் அளித்தவர் படுகொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த அவருடைய மைத்துனருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் புகார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளம் அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர், முருகன் (வயது 27). கூலி தொழிலாளி. அதேபோல் பாட்டக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் (21). இவர் முருகன் வசித்த பகுதியில் உள்ள பெண்களை கேலி-கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை முருகன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் முருகன், சிலருடன் சேர்ந்து லாரன்ஸ் மீது கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முருகன் தனது வீட்டின் முன்பு படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த லாரன்ஸ், முருகனை ஆபாசமாக பேசியதுடன், அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்க வந்த முருகனின் மைத்துனரான ராஜாவுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடந்த முருகனை, உறவினர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டது. ராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கைது
இந்த கொலை தொடர்பாக முருகனின் மனைவி கவிதா (24) அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரன்சை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிைலயில் சிவகாசி அருகே ஒரு கல்லூரி மைதானத்தில் பதுங்கி இருந்த லாரன்சை, இன்ஸ்பெக்டர் சிவலிங்க சேகர் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story