திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா


திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா
x

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருச்சி, ஆக.26-
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி மாவட்டத்தில் பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கொரோனா 3-வது அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில்பல்வேறுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர் மற்றும் புறநகரில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள்கூட்டமாககூடுவதைதவிர்க்கும்வகையில்,வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவில்களில்தரிசனம்செய்யதடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் முககவசம் இல்லாமல் செல்லும் பொதுமக்களுக்கும்,சமூகஇடைவெளியைகடைபிடிக்காதவியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா
இந்தநிலையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்திக்கு கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வில் பங்கேற்றதால் அவருக்கு தொற்று பரவியதா? அல்லது பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கியதால் தொற்று பரவியதா? என விசாரித்து வருகிறார்கள்.

Next Story