போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமன ஆணை


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 26 Aug 2021 1:39 AM IST (Updated: 26 Aug 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமன ஆணையை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் வழங்கினார்.

நெல்லை:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நெல்லை மாநகர பகுதிக்கு 16 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான 16 பேரையும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் அவர்கள் சிறப்புடன் பணியாற்ற அறிவுரைகள் வழங்கி வாழ்த்து கூறினார்.



Next Story