குமரிக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி 17 ஆயிரம் டோஸ் வந்தது
குமரி மாவட்டத்துக்கு 17 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்துக்கு 17 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தது.
17 ஆயிரம் டோஸ்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. நேற்று மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்துக்கு கோவிஷீல்டு 15,900 டோஸ் மற்றும் கோவேக்சின் 1,100 டோஸ் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த டோஸ்கள் அனைத்தும் நேற்று மதுரையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு சுகாதார அதிகாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. இதில் முதல் மற்றும் 2-வது டோசும் அடங்கும். இதனைத்தொடர்ந்து தேவைக்கு ஏற்ப பல்வேறு பகுதிகளுக்கு தடுப்பூசி மருந்துகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
26 பேருக்கு கொரோனா
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தொற்று பாதிப்புக்கு 285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story