மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
நாகர்கோவில்:
வெள்ளிசந்தை கட்டவிளை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு பறக்கை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் பறக்கையை சேர்ந்த அப்துல் அஜீஸ் (33) என்பவர் வேகமாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அப்துல் அஜீசின் மோட்டார் சைக்கிள், முன்னால் சென்று கொண்டிருந்த மகேசின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மகேஷ் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அப்துல் அஜீஸ் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த மினிலாரி மீது மோதியது. இதில் அப்துல் அஜீசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயத்துடன் உயிருக்கு போரடி கொண்டிருந்த மகேசை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேேய மகேஷ் பரிதபமாக இறந்தார். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அப்துல் அஜீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story