தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் கூறினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஏற்கனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நேற்று முதல் இந்த பணி தொடங்கி உள்ளது. எனவே பொதுமக்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் இந்த தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம் என ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story