பெண் தீக்குளிக்கப்போவதாக தகவல் பரவியதால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போலீஸ் பாதுகாப்பு


பெண் தீக்குளிக்கப்போவதாக தகவல் பரவியதால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 2:20 AM IST (Updated: 26 Aug 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

பெண் தீக்குளிக்க போவதாக தகவல் பரவியதால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வேலூர்

பெண் தீக்குளிக்க போவதாக தகவல் பரவியதால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

தீக்குளிக்க போவதாக தகவல்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்குகிறது. 

இங்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர். புகார் மனு அளிக்கவும் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் நடந்துள்ளது. 
இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்கப்போவதாக தகவல் பரவியது.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் நேற்று பிற்பகல் கலெக்டர் அலுவலகத்தில் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நுழைவு வாயில், ஊரக வளர்ச்சி துறை கட்டிட நுழைவு வாயில் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.

 கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களை விசாரித்து, அவர்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்து உள்ளே அனுப்பினர். மேலும் அலுவலக வளாகத்திலும் ஏராளமான போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story