போதை மாத்திரைகள் விற்ற மருந்து கடை உரிமையாளர் கைது


போதை மாத்திரைகள் விற்ற மருந்து கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2021 2:52 AM IST (Updated: 26 Aug 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் போதை மாத்திரைகள் விற்ற மருந்து கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:
பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பாளையங்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சென்று சோதனை நடத்தினர். 

தொடர்ந்து கடையின் உரிமையாளரான பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த தேவராஜ் (வயது 50) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் இளைஞர்களுக்கு போதை உண்டாக்கக்கூடிய மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.



Next Story