கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி: சேலம் மாவட்டத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 79 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், நேற்று புதிதாக 73 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் 11 பேர், ஓமலூரில் 9 பேர், வீரபாண்டியில் 8 பேர், எடப்பாடி மற்றும் ஓமலூரில் தலா 6 பேர், சங்ககிரி, தாரமங்கலம் தலா 4 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கேரளாவில் இருந்து சேலம் வந்த ஒருவரும், நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வந்த தலா 2 பேரும், தர்மபுரி, சென்னையில் இருந்து வந்த தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,071 பேருக்கு சிகிச்சை
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 103 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அதேசமயம், 1,071 பேர் நோய் தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா பாதிப்புக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story