காதலனை தாக்கி கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்


காதலனை தாக்கி கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்
x
தினத்தந்தி 26 Aug 2021 3:02 AM IST (Updated: 26 Aug 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது.

மைசூரு: மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது. 

கூட்டு பலாத்காரம்

மைசூரு டவுனில் செயல்பட்டு வரும் கல்லூரியில் 20 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார்.  அந்த மாணவி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த மாணவியும், அவருடன் படிக்கும் மாணவர் ஒருவரும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கல்லூரி மாணவியும், அவரது காதலனும் ஒரு காரில் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதா திரிபுரா பகுதிக்கு சென்றனர். அங்கு காரை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், கல்லூரி மாணவியின் காதலனை பிடித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டாக பலாத்காரம் செய்து உள்ளதாக தெரிகிறது. 

கொலை மிரட்டல்

பின்னர் கல்லூரி மாணவியிடமும், அவரது காதலனிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று உள்ளது. பின்னர் கல்லூரி மாணவியை அவரது காதலன் மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மாணவியை டாக்டர் பரிசோதனை செய்த போது அவர் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளானது தெரிந்தது.
இதுகுறித்து மாணவியிடம் டாக்டர் கேட்ட போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதார். 
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆலனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் இளம்பெண்ணிடமும், அவரது காதலனிடம் சம்பவம் குறித்து விசாரித்து தகவல்களை பெற்று கொண்டனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கும் போலீசார் சென்று ஆய்வு நடத்தினர். 

காதலனிடம் விசாரணை 

இந்த நிலையில் கல்லூரி மாணவியின் காதலன் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் இந்த கூட்டு பலாத்காரத்தில் காதலனின் நண்பர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இதனால் காதலனை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் சம்பவம் குறித்து ஆலனஹள்ளி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 6 பேர் கும்பலையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 6 பேர் கும்பலால் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story