கோபி அருகே மனைவியை தாக்கிய கணவருக்கு 2 ஆண்டு ஜெயில்


கோபி அருகே மனைவியை தாக்கிய கணவருக்கு 2 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 26 Aug 2021 3:19 AM IST (Updated: 26 Aug 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே மனைவியை தாக்கிய கணவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோபி கோா்ட்டு தீா்ப்பு கூறியுள்ளது.

கடத்தூர்
கோபி அருகே உள்ள அளுக்குளியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 53). இவருடைய மனைவி செல்லம்மாள் (45). கூலித்தொழிலாளி. கடந்த தைப்பொங்கலன்று அரசு கொடுத்த ரூ.2500-ஐ செல்லம்மாள் வீட்டுக்கு வாங்கி வந்தார். அப்போது அந்த பணத்தை ராஜா கேட்க, செல்லம்மாள் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா குச்சியால் செல்லம்மாளை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார்கள். இதுகுறித்து வழக்கு கோபி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஸ்வநாத் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மனைவியை தாக்கிய ராஜாவுக்கு 2 வருடம் ஜெயில் தண்டனையும், ரூ.200 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

Next Story