திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2021 2:29 PM IST (Updated: 26 Aug 2021 2:29 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நகராட்சியுடன் 5 கிராமங்களை இணைக்க எதி்ர்ப்பு


திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு நேற்று சட்டசபையில் அறிவித்தது. இந்த நிலையில் தரம் உயர்த்தப்பட்ட திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள தேவியகரம், வீரட்டகரம் அரும்பாக்கம், கனக நந்தல், டி.கே.மண்டபம் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று திடீரென திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அவர்கள் மேற்கண்ட கிராமங்களை தரம் உயர்த்தப்பட உள்ள திருக்கோவிலூா் நகராட்சியின் எல்லைக்குள் கொண்டு வரக் கூடாது எனவும், அவ்வாறு கொண்டு வந்தால் கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பு பாதிக்கும் மற்றும் அரசின் இதர நலத்திட்ட உதவிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பேரூராட்சி அதிகாரியிடம் வழங்கினர். இது பற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.




Next Story