வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட ஆலோசனைக்கூட்டம்


வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட ஆலோசனைக்கூட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2021 8:36 PM IST (Updated: 26 Aug 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக்கூட்டம்
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  சமுதாய மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பின்தங்கிய குறிப்பாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி பெற தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
 இதனை அனைவரும் அறியும் வகையில் மாவட்டத்தில் அமைந்துள்ள கீழ்கண்ட வட்டாரங்களில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் சுயதொழில் கடன் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டங்கள் குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட யூனியன் அலுவலகங் களில் காலை 10.30 மணி அளவில் நடைபெறும்.
 நடைபெறும் இடங்கள்
 ராஜபாளையம் யூனியன் அலுவலகத்தில் செப்டம்பர் 1-ந் தேதியும், நரிக்குடி யூனியனில் செப்டம்பர் 8-ந் தேதியும் திருச்சுழி யூனியனில் செப்டம்பர் 15-ந் தேதியும் நடைபெறும். எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் குறிப்பிட்டுள்ள நாட்களில் தொழில் ஊக்குவிப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். கூட்டத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும் வங்கியில் கடன் பெறுவது எப்படி, தொழில் முனைவோர் ஆவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
 எனவே மேற்குறிப்பிட்ட பகுதி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மேற்குறிப்பிட்ட நாள்களில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு மாவட்ட தொழில் மையம் விருதுநகர் மூலம் செயல்படுத்தப்படும் அரசு கடன் திட்டங்களை பற்றி அறிந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story