திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவண்ணாமலை வட்டக்குழு சார்பில் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரில் மக்கள் நாடாளுமன்றம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஞானவேல் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் முத்தையன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் முறையீடுகளை ஏற்க மறுத்து விவாதமில்லாமல் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை போன்றவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story