நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு


நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு
x
தினத்தந்தி 26 Aug 2021 10:28 PM IST (Updated: 26 Aug 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

நாமக்கல்:
நாமக்கல் –திருச்சி சாலையில் செயல்படும் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் 2021–-2022-ம் கல்வியாண்டுக்கு இணையவழியில் விண்ணப்பித்துள்ள மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து கல்லுாரி பேராசிரியைகள் கூறியதாவது:-
முதலில் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவு மாணவிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் விண்ணப்பத்தில் வழங்கப்பட்டு உள்ள செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் வழியாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களில் 348 மாணவிகள் இந்த கல்லூரியில் சேர்ந்து உள்ளனர். தொடர்ந்து நடைபெற உள்ள கலந்தாய்வில் ஏராளமான மாணவிகள் சேர உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக சேர்க்கைக்கு வந்த மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story