வெண்ணந்தூர் அரசு பெண்கள் பள்ளியில் கலெக்டர் ஆய்வு


வெண்ணந்தூர் அரசு பெண்கள் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 26 Aug 2021 10:28 PM IST (Updated: 26 Aug 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

நாமக்கல்:
கலெக்டர் ஆய்வு
தமிழ்நாடு அரசு அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. மேலும் 50 சதவீத மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அலவாய்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார். அப்போது அவர் முககவசம், கிருமி நாசினி, பல்ஸ் ஆக்ஸி மீட்டர், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் ஆகியவை போதுமான அளவில் இருப்பில் உள்ளதா? என தலைமை ஆசிரியையிடம் கேட்டறிந்தார்.
மேலும் பள்ளி வளாகம், கழிப்பறைகள், வகுப்பறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்தும், ஆசிரியர்கள் வருகை பதிவேடு, பள்ளி மாணவிகள் எண்ணிக்கை, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட விவரம் ஆகியவற்றை  கேட்டறிந்தார்.
கொரோனா தடுப்பூசி
தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் எனவும், பள்ளிகளில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்பு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு தங்களையும், பள்ளிக்கு வருகை தரும் மாணவிகளின் பாதுகாப்பினையும் உறுதி செய்திட வேண்டும் என அறிவுறித்தினார்.
இந்த ஆய்வின் போது தலைமை ஆசிரியை பேபி லதா, உதவி தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story