ஆரணி அருகே; பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை ஏரியில் வீச்சு


ஆரணி அருகே; பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை ஏரியில் வீச்சு
x
தினத்தந்தி 26 Aug 2021 10:33 PM IST (Updated: 26 Aug 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தையை ஏரியில் வீசிச்சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முனுகப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மேல்புத்தூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை சிலர் சென்றுள்ளனர்.

அப்போது அந்தப்பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்டு கிடந்தது. 

உடனடியாக அவர்கள் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசிச்சென்றவர்கள் யார்?, கள்ளக்காதலில் பிறந்ததால் வீசிச்சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story