திருத்துறைப்பூண்டி அருகே முருகன் சிலை கண்டெடுப்பு
திருத்துறைப்பூண்டி அருகே கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலை அரசு பாதுகாப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலை அரசு பாதுகாப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
முருகன் சிலை கண்டெடுப்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சியில் அன்னபூரணி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் அப்பகுதி பொதுமக்கள் தற்காலிக அரங்கு அமைத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் புதிதாக கோவில் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று அண்ணபூரணி கோவில் வாசலில் உள்ள துளசி மாடத்தில் 250 கிராம் எடையுள்ள முருகன் சிலை ஒன்று கண்ெடடுக்கப்பட்டது. இந்த சிலையை மர்மநபர்கள் வைத்துவிட்டு சென்று இருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
அரசு பாதுகாப்பகத்தில் ஒப்படைப்பு
திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு இந்த சிலை எடுத்து செல்லப்பட்டது. இந்த சிலையை அண்ணபூரணி கோவிலுக்கு எடுத்து வர வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் ரமா, மேட்டுப்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சிவபாலன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலெக்சாண்டர் ஆகியோர் பெருமாள் கோவிலில் இருந்த முருகன் சிலையை எடுத்து வந்தனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ரமா முன்னிலையில் சிலை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தாசில்தார் முருகன் சிலையை திருத்துறைப்பூண்டி அரசு பாதுகாப்பகத்தில் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story