மத்தூர் அருகே சரக்கு வேன்- மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி 2 பெண்கள் காயம்
மத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். சாலையில் நடந்து சென்ற 2 பெண்கள் காயம் அடைந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 26). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் மத்தூர்- வாலிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக ராஜ்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் நடந்து சென்ற கன்னுகானூரை சேர்ந்த செல்வி (41), கல்யாணி 39) ஆகியோர் மீது மோதியது.
பெண்கள் காயம்
இந்த விபத்தில் ராஜ்குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வி, கல்யாணி ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story