25 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த வீட்டில் நள்ளிரவில் பூஜை செய்ததால் பரபரப்பு. நரபலிகொடுக்க முயற்சியா? என போலீசார் விசாரணை


25 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த வீட்டில் நள்ளிரவில் பூஜை செய்ததால் பரபரப்பு. நரபலிகொடுக்க முயற்சியா? என போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Aug 2021 11:29 PM IST (Updated: 26 Aug 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே 25 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த வீட்டில் திடீரென நள்ளிரவில் பூஜை நடந்தது. இதனால் நரபலி கொடுக்க முயற்சியா என போலீசார் விசாரணை நடத்தினர்.

அரக்கோணம்

அரக்கோணம் அருகே 25 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த வீட்டில் திடீரென நள்ளிரவில் பூஜை நடந்தது. இதனால் நரபலி கொடுக்க முயற்சியா என போலீசார் விசாரணை நடத்தினர்.

நள்ளிரவில் பூஜை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 56). இவர் அதேகிராமத்தில் உள்ள தனது வீட்டை பூட்டிவைத்துவிட்டு முசல்நாயுடு கண்டிகை கிராமத்தில் வசித்து வருகிறார். இதனால் கடந்த 25 ஆண்டுகளாக கிழவனம் கிராமத்தில் உள்ள வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் கிழவனம் கிராமத்தில் 25 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிலர் பூஜைகள் செய்வதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

வீட்டில் பள்ளம்

அங்கு பார்த்தபோது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய பள்ளம் தோண்டப்பட்டு, சிலர் பூஜை செய்து கொண்டிருந்தனர். பூஜையில் ஈடுபட்டிருந்த ஆசீர்வாதம் (வயது 51) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது ஆசீர்வாதம் தான் லாரி டிரைவராக வேலை செய்வதாகவும், தற்போது அரக்கோணம் அருகே உள்ள முசல்நாயுடு கண்டிகையில் வசித்து வருவதாகவும் கூறினார். மேலும் 3 மகள்கள் இருப்பதாகவும், இரண்டாவது மகளின் கணவர் கடந்த மாதம் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், இதனால் இரண்டாவது மகளை பூர்வீக வீடான கிழவனம் கிராமத்தில் உள்ள வீட்டில் குடி அமர்த்துவதற்காக வீட்டை சுத்தம் செய்ததாக கூறி உள்ளார்.

நரபலி கொடுக்க முயற்சியா?

கடந்த 25 ஆண்டுகளாக அந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால், வீட்டில் பேய் உள்ளதாகவும், அதனை விரட்ட வேண்டும் என்று மந்திரவாதி தெரிவித்ததால், பூஜை செய்வதற்காக 2 அடி பள்ளம் தோண்டப்பட்டு பேய் விரட்டுவதற்காக பூஜைகள் செய்ததாவும் அவர் தெரிவித்தார். 
தொடர்ந்து நரபலி கொடுக்க அவர் முயற்சி செய்யதாரா? என்ற கோணத்தில் தாலுகா போலீசார் விசாரித்ததில் அது போன்று ஏதும் இல்லை என்று தெரியவந்தையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story