குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவர் கைது
வந்தவாசியில் குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
நெல்லை மாவட்டம் செட்டிக்குளம் மேட்டுத்தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் அருள்ராஜ் (வயது 35), பஸ் டிரைவர். இவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க உறவினர்களை ஒரு சுற்றுலா பஸ்சில் அழைத்து வந்தார்.
பின்னர் அளவுக்கு அதிகமாக மதுபானத்தைக் குடித்து விட்டு போதையில் அங்கும் இங்குமாக தரையில் படுத்து உருண்டார். திடீரென எழுந்த அவர் போதையில் தள்ளாடியபடி நடந்து சென்று, தான் ஓட்டி வந்த பஸ்சை இயக்கி மீண்டும் ஓட்டினார். அந்தப் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது.
அதைப் பார்த்த பொதுமக்கள் ஓடும் பஸ்சில் ஏறி பஸ்சை நிறுத்துமாறு அவரிடம் கூறினர். பஸ் நின்றதும், டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
குடிபோதையில் பஸ்சை ஓட்டிய டிரைவர் அருள்ராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story