வாணியம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் பெண்கள் தர்ணா
குடும்பத்தினருடன் பெண்கள் தர்ணா
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிைய அடுத்த கலந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரின் மனைவி லட்சுமி. இவர்களுக்கு ரீட்டா, ரோசி, சுபாஷ் சந்திரபோஸ் என 3 பிள்ளைகள் உள்ளனர். ஜோதி, லட்சுமி தம்பதியர் இறந்து விட்டனர். இவர்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து, பிரித்துத் தர வேண்டி வாணியம்பாடி தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் என 3 இடங்களில் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, எனத் தெரிகிறது.
தங்களின் நிலத்தை அளவீடு செய்து பிரித்துக் கொடுக்கக்கோரியும், பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் ரீட்டா, தனது அண்ணன் சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் நேற்று காலை குடும்பத்துடன் வாணியம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசாரும், வருவாய் துறையினரும் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிலத்தை அளவீடு செய்து பிரித்துத் தருவதாக அதிகாரிகள் கூறியதன்பேரில் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story