குடியிருப்புக்கான மனுக்கள் கொடுக்க குவிந்த பொதுமக்கள்


குடியிருப்புக்கான மனுக்கள் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 26 Aug 2021 11:59 PM IST (Updated: 26 Aug 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புக்கான மனுக்கள் கொடுக்க குவிந்த பொதுமக்கள்

திருப்பூர்
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் திருப்பூர் கோட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கான குடியிருப்பு தொடர்பான மனுக்கள் பெறும் முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது வாரமாக நேற்று நடந்தது. குறைதீர்க்கும் கூட்டரங்கின் வாயிலாக நடந்ததில், திருப்பூர், பல்லடம், உடுமலை, அவினாசி மற்றும் மடத்துக்குளம் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் விண்ணப்பங்கள் வழங்கினர். 
இது குறித்து குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் கூறியதாவது:- 
திருப்பூர் வீரபாண்டியில் 1280 வீடுகள், நெருப்பெரிச்சலில் 1792 வீடுகள், உடுமலையில் 320 வீடுகள், அவினாசியில் 447 வீடுகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 839 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வீடுகள் பெறும் பயனாளிகளிடம் பங்களிப்பு தொகை வசூலிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும். கலெக்டர் உத்தரவை பொறுத்து வீடுகள் ஒதுக்கீடு பணி விரைவில் நிறைவடையும்.

Next Story