குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2021 12:04 AM IST (Updated: 27 Aug 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருப்பூர்
திருப்பூர் மாநகர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சூர்யாநகரில் உள்ள சிவா வேஸ்ட் குடோனில் கடந்த 2-6-2021 அன்று நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய காதர்பேட்டையை சேர்ந்த சையது முகமது இக்ரம் (வயது 24) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்திக், ஆதித்யா, தேவசரண், ஜெயராம் ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் சையது முகமது இக்ரமையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார். அதன்படி குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். சையது முகமது இக்ரம் மீது 15 வேலம்பாளையம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரை நடப்பு ஆண்டில் 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story