மண்எண்ணெய் கேனுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மண்எண்ணெய் கேனுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
தினத்தந்தி 27 Aug 2021 12:09 AM IST (Updated: 27 Aug 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

மண்எண்ணெய் கேனுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 
திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தை அதிகாரிகள் மீட்க சென்ற போது, அவர்களுக்கு எதிராக மண்எண்ணெய் கேனுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
மாநகராட்சிக்கு சொந்தமான இடம் 
திருப்பூரில் பனியன் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கானவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் பலர் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வீடுகள் மற்றும் குடிசைகள் அமைத்து குடியிருந்து வருகிறார்கள்.
மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்கவும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் பலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டி வசித்து வருவதாக தெரிகிறது.  
தர்ணா போராட்டம் 
இதனால் ஆக்கிரமிப்பு இடத்தை மாநகராட்சிக்கு திரும்ப ஒப்படைக்குமாறு அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஒப்படைக்காமல் இருந்து வந்துள்ளனர். 
இதனால் நேற்று காலை கொங்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க, மாநகராட்சி அதிகாரிகள், போலீசாருடன் அங்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மண்எண்ணெய் கேனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் அதிகாரிகளை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த தீர்வும் காணப்படாததால் அங்கிருந்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Next Story