குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 4வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 4வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரபாண்டி,
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 4-வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டல அலுவலகம் முற்றுகை
திருப்பூர் ஆண்டிபாளையம் 59 வார்டு அண்ணா நகர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் இன்றி தவித்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென்று 4-வது மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- ஆண்டிபாளையம் அண்ணாநகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அன்றாட கூலிக்கும், பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர்கள். அண்ணாநகர் பகுதியில் தற்போது வரை தார்சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இன்றி தவித்து வருகின்றோம். ஆண்டிபாளையம் முக்கிய சாலைகளில் 4-வது குடிநீர் திட்டம் மற்றும் கேஸ் பைப் இணைக்கும் பணியை மாநகராட்சி செய்து வருகிறது.
தட்டுப்பாடு
இந்நிலையில் கடந்த மாதம் அண்ணாநகர் செல்லும் சாலையில் கேஸ் பைப் இணைப்பிற்காக குழி தோண்டியபோது குடிநீர் குழாயை சேதப்படுத்தினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. தற்போது வரை அதனை சரி செய்யாமல் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகிறோம். கேஸ் பைப் இணைப்பிற்காக குழி தோண்டும் பொழுது குடிநீர் குழாய் பல இடங்களில் உடைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகிகளும் சரிவர கவனிப்பதில்லை. இதனால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து 4-வது மண்டல அதிகாரி ஹரி மற்றும் குடிநீர் வினியோக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய ஊழியர்களை அனுப்பி நடவடிக்கை எடுத்தனர். மேலும் அப்பகுதி பொது மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை தவிர்த்து கலைந்து சென்றனர். இதனால் மண்டல அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story