ஜோலார்பேட்டை, ஆம்பூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க லெக்டர் உத்தரவு


ஜோலார்பேட்டை, ஆம்பூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க லெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 27 Aug 2021 12:16 AM IST (Updated: 27 Aug 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை, ஆம்பூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், அதனால் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை, ஆம்பூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், அதனால் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தொற்று அதிகரிக்கிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வந்தது. தற்போது ஒரு சில இடங்களில் குறிப்பாக ஜோலார்பேட்டை, ஆம்பூர், மாதனூர் ஆகிய பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த பகுதியில் அதற்கான காரணங்கள் குறித்து மருத்துவ குழுவினர் முகாமிட்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

மேலும் மாவட்டடத்தில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை தினசரி 5 ஆயிரமாக உள்ளது. இதனை 10 ஆயிரமாக கொண்டுவர அனைவரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக 208 கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினசரி நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அபராதம் விதிக்க வேண்டும்

தற்போது அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை குறைந்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் முககவசம் அணிவது இல்லை. கடைகளில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் கூட்டம், கூட்டமாக உள்ளனர். இது நோய் பரவலுக்கு வழிவகுக்கும். எனவே அனைத்து பகுதிகளிலும் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். 
அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, பொதுசுகாதார துணை இயக்குநர் செந்தில் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Next Story