திருப்பூர் மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


திருப்பூர் மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 27 Aug 2021 12:19 AM IST (Updated: 27 Aug 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர், ஆக.27-
திருப்பூர் மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 
கொரோனா தடுப்பூசி 
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
திருப்பூர் மாநகரில் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட்ட நபர்கள் என சில மையங்களில் 300 பேர் வீதம் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி சாமிநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாலமுருகன்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிறுபூலுவப்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, அனுப்பர்பாளையம்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நெசவாளர் காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, சத்தியசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. 
குமாரனந்தாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதிநகர் டி.என்கே.வித்யாலயம், சின்னசாமியம்மாள் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வாவிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாண்டியன்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நேருநகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, போயம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஏ.எஸ்.பண்டிட்நகர் எஸ்.எஸ்.ஏ., மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மண்ணரை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி. 
மாநகராட்சி பள்ளி 
கருமாரம்பாளையம் மெயின்ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சந்திராபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, காங்கேயம் ரோடு அல்அமீன் பள்ளி, செரங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, புதுதோட்டம் கிட்ஸ் கிளப் பள்ளி, செல்லப்புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வாலிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி.
ஓடக்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதிநகர் யுனிவர்செல் பள்ளி, பலவஞ்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஜவகர்நகர் நடுநிலைப்பள்ளி, கதிரவன் நடுநிலைப்பள்ளி, தெற்கு ரோட்டரி நடராஜ் தியேட்டர் ரோடு, சின்னகவுண்டன்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, முருகம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story