குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும்
குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும்
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடியிடம், இந்திய கம்யூனிஸ்டு் கட்சியினர் மற்றும் வீரபாண்டி ஏ.பி.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட ஏ.பி.நகர் கிழக்கு பகுதியில் ஏராளமானவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக புதியதாக எந்த வேலையும் செய்யவில்லை. குடிநீர் வினியோம் மிகவும் மோசமாக உள்ளது. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருகிறது. எங்கள் பகுதி புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும். சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story