வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
லாலாபேட்டை,
லாலாபேட்டை அருகே கொம்பாடிபட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). இவர் கரூரில் உள்ள ஒரு செல்போன் டவர் நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று பணியை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிந்தலவாடி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென்று பிரேக் போட்டதால், பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த சதீஷ்குமார் வேன் மீது பயங்கரமாக மோதினார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story