கத்தியை காட்டி மிரட்டி பால் வியாபாரியிடம் சங்கிலி பறிப்பு


கத்தியை காட்டி மிரட்டி பால் வியாபாரியிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 12:33 AM IST (Updated: 27 Aug 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

பால் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கரூர்,
பால் வியாபாரி
கரூர் மாவட்டம் மூக்குனாங்குறிச்சி அருகே உள்ள வால் காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 33). இவர் நாள்தோறும் வால் காட்டுப்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வடிவேல் நகர் அருகே உள்ள முனியப்பன் கோவில் அருகே இருசக்கர வாகனத்துடன் பாலசுப்பிரமணி நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி பாலசுப்பிரமணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார்.
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணி புகார் கொடுத்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்.
பால் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story