குடல் வெளிவந்த நிலையில் செத்துக்கிடந்த ஆடு- கன்றுக்குட்டிகள்


குடல் வெளிவந்த நிலையில் செத்துக்கிடந்த ஆடு- கன்றுக்குட்டிகள்
x
தினத்தந்தி 27 Aug 2021 1:11 AM IST (Updated: 27 Aug 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே குடல் வெளிவந்த நிலையில் ஆடு, கன்றுக்குட்டிகள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன.

பெரம்பலூர்:

செத்துக்கிடந்தன
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). விவசாயியான இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் ஆடு, மாடு, கன்றுக்குட்டிகளை ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தனது கொட்டகையில் கட்டிவிட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அவர் கொட்டகைக்கு சென்று பார்த்த போது, ஒரு ஆடு, 2 கன்றுக்குட்டிகள் குடல் வெளியே வந்த நிலையில் மர்மமான முறையில் செத்து கிடந்ததையும், மற்றொரு கன்றுக்குட்டி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சிறுத்தை தாக்கியதா?
இதுகுறித்து அவர் உடனடியாக போலீசாருக்கும், வனத்துறை மற்றும் கால்நடைத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆடு, கன்றுக்குட்டிகளை கடித்து கொன்ற விலங்கு எது என்பது குறித்து அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அங்கு வந்த கால்நடைத்துறையினர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர். ஆடு, கன்றுக்குட்டிகளை கடித்து கொன்ற விலங்கு, துறையூர் பகுதியில் தாக்கிய சிறுத்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் வனத்துறையினர், அதனை பிடிக்க கூண்டு, வலையுடன் தயாராகி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Tags :
Next Story