போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்


போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 27 Aug 2021 1:11 AM IST (Updated: 27 Aug 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சமடைந்தது.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி. இவருடைய மனைவி அஞ்சலை, மகன் அரவிந்த்(வயது 21), மகள் அபிராமி. பழனியாண்டி ஏற்கனவே இறந்து விட்டார். கேரளாவில் கனரக எந்திர ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த அரவிந்த், தற்போது கொளத்தூரில் வசித்து வருகிறார். அபிராமி திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். அரவிந்த் தனது தங்கையை பார்ப்பதற்காக அந்த மருத்துவமனைக்கு சென்று வந்தபோது, அதே மருத்துவமனையில் பணிபுரியும் திருச்சி மாவட்டம் பெருவளநல்லூர் கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகள் சிம்ரன்(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் நேற்று அரியலூரில் உள்ள காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் திருமண கோலத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி விசாரணை நடத்தினார். இந்நிலையில் போலீஸ் நிலையத்திற்கு சிம்ரன் குடும்பத்தினர் வருவதற்கு காலதாமம் ஆனதால், இன்று(வெள்ளிக்கிழமை) மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக சிம்ரனிடம் தெரிவித்து, அரவிந்த் வீட்டிற்கு அவரை அனுப்பி வைத்தனர்.

Next Story