கல்லூரி பெண் ஊழியருக்கு கொரோனா


கல்லூரி பெண் ஊழியருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Aug 2021 2:03 AM IST (Updated: 27 Aug 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி பெண் ஊழியருக்கு கொரோனா உறுதியானது

முசிறி
முசிறி அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பணிபுரியும் அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு கல்லூரிக்கு வர வேண்டாம். மேலும் முதலாமாண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கை குழுவின் தீர்மானத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துறை சார்ந்த ஆசிரியர்கள் துறைத் தலைவரிடம் தகவல்களை பெற்று அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உடனடியாக செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் ராஜ்குமார் ெதரிவித்துள்ளார்.


Next Story