வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடையநல்லூர் அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே உள்ள ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 26). இவர் இலத்தூர், ஆய்க்குடி, கடையநல்லூர், சேர்ந்தமரம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக அவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் முத்துக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆவணங்களை ஆய்க்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி பாளையங்கோட்டை சிறையில் வழங்கினார்.
Related Tags :
Next Story