பெங்களூரு- சேலம் இடையே முன்பதிவு இல்லாத அதிவிரைவு சிறப்பு ரெயில் 30-ந் தேதி முதல் இயக்கம்
பெங்களூரு- சேலம் இடையே முன்பதிவு இல்லாத அதிவிரைவு சிறப்பு ரெயில் 30-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
சூரமங்கலம்:
கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், பயணிகளின் வசதிக்காக ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூரு யஸ்வந்த்பூர்-சேலம் (வண்டி எண் 07315) இடையே முன்பதிவு இல்லாத அதிவிரைவு சிறப்புரெயில் வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அதன்படி இந்தரெயில் பெங்களூரு யஸ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு ஓசூர், ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, தர்மபுரி, தொப்பூர், ஓமலூர் வழியாக இரவு 9.40 மணிக்கு சேலம் வந்தடையும். மறுமார்க்கத்தில் 31-ந் தேதி முதல் சேலம்- பெங்களூரு யஸ்வந்த்பூர் (வண்டி எண் 07316) அதிவிரைவு சிறப்புரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அதிகாலை 5.20 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூரு யஸ்வந்த்பூருக்கு காலை 11.15 மணிக்கு சென்றடையும்.
இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story