மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 27 Aug 2021 4:48 AM IST (Updated: 27 Aug 2021 4:48 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

மேட்டூர்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் மழை குைறந்ததால், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 620 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரத்து 789 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 553 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 650 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கால்வாய் பாசனத்திற்கு நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை முதல் வினாடிக்கு 650 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story