கர்ப்பிணிகள் விண்ணப்பிக்கலாம்
கர்ப்பிணிகள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
திருப்பூர் மாநகர கமிஷனர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஏழை, எளியோர், பெண்கள், முதியோர் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நகர சுகாதார செவிலியரிடம் கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப விவரத்தை பதிவு செய்து, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகர, சுகாதார செவிலியரிடம் ஆதார் எண், கணவரது ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வழங்கி கர்ப்ப பதிவு எண் பெற வேண்டும். இந்த திட்டத்தில் பதிவு பெறும் கர்ப்பிணி தாய்மார்கள் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள சத்து பெட்டகம் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
--------
Related Tags :
Next Story