பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவை பாதிப்பு


பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 4:48 PM IST (Updated: 27 Aug 2021 4:48 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் மழைநீர் வடிகால் கட்டுவதற்காக குழி தோண்டியபோது பி.எஸ்.என்.எல்.தொலைதொடர்பு ஒயர்கள் துண்டானதால் தொலை பேசி சேவை பாதிக்கப்பட்டது.

உடுமலை
உடுமலையில் மழைநீர் வடிகால் கட்டுவதற்காக குழி தோண்டியபோது பி.எஸ்.என்.எல்.தொலைதொடர்பு ஒயர்கள் துண்டானதால் தொலை பேசி சேவை பாதிக்கப்பட்டது. 
மழைநீர் வடிகால் 
உடுமலை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததைத்தொடர்ந்து வீட்டுக்கழிவு நீர் பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் சென்று கொண்டுள்ளது. அதனால் வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து சாக்கடை கால்வாயில் விடப்பட்டு வந்த கழிவு நீரை, இனி அவ்வாறு சாக்கடை கால்வாயில் விடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்உடுமலை நகராட்சி பகுதியில் வ.உ.சி.வீதி, கச்சேரி வீதி, கல்பனா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் பழுதடைந்த நிலையில் இருந்த சாக்கடை கால்வாய்க்கு பதிலாக நகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த மழைநீர் வடிகால் கட்டுவதற்காக வ.உ.சி.வீதியில் ஜே.சி.பி.வாகனம் மூலம் குழி தோண்டும் பணிகள் நடந்தது.
கேபிள் துண்டானது
அப்போது வ.உ.சி.வீதி பசுபதி வீதி சந்திப்பு பகுதியில் நிலத்தடியில் செல்லும் பி.எஸ்.என்.எல்.தொலைத்தொடர்பு கேபிள் துண்டானது.இந்த கேபிளினுள் உள்ள வயர்கள் மூலம் 1200தொலைபேசி இணைப்புகள் உள்ளன.இவை துண்டானதால் இந்த ஒயர்கள் மூலமான தொலைபேசி இணைப்புசேவைகள், நெட், நெட்பேங்கிங் வசதி ஆகியவை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ஒயர்களை பழுதுபார்த்து இணைக்கும் பணிகளைபி.எஸ்.என்.எல்.
பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.



Next Story