மின்சாரம் தாக்கி 8 மாத குழந்தை சாவு


மின்சாரம் தாக்கி 8 மாத குழந்தை சாவு
x
தினத்தந்தி 27 Aug 2021 4:52 PM IST (Updated: 27 Aug 2021 4:52 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கேயம்
காங்கேயம் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
8 மாத குழந்தை
திண்டுக்கல் மாவட்டம், அஞ்சுகுழிபட்டி, மேப்பட்டி தெருவை சேர்ந்தவர் மூக்கன் என்கிற  ரஞ்சித் வயது 24. இவரது மனைவி பச்சையம்மாள் 21. இருவரும் கடந்த 3 வருடங்களாக திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சிவன்மலை அருகே உள்ள ஒரு தேங்காய் களத்தில் தங்கி தேங்காய் உடைத்து உலர்த்தும் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் 8 மாத பெண் குழந்தை சத்திதேவி.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் மூக்கன் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இவரது மனைவி பச்சையம்மாள் வீட்டில் சமையல் அறையில் சமைத்து கொண்டிருந்துள்ளார். குழந்தை சத்திதேவி வீட்டில் தவழ்ந்து விளையாடியது.
பலி
 அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த மின்சார ஜங்சன் பாக்சின் மேல் புறத்தில் இருந்த வயரை குழந்தை சத்திதேவி பிடித்து பிடித்துள்ளது.  இதில் மின்சாரம் தாக்கி குழந்தை சத்திதேவி பரிதாபமாக உயிரிழந்தது. 
சிறிது நேரம் கழித்து சமையல் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்த பச்சையம்மாள் குழந்தை அசைவில்லாமல் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து குழந்தையை தூக்கியுள்ளார். அப்போது மின்சாரம் பச்சையம்மாள் மீது பாய்ந்த போது, குழந்தை மின்சாரம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தந்தை மூக்கனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் உடனடியாக குழந்தையை அவர்களின் மோட்டார் சைக்கிளில் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் காங்கேயம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story