10 பேருக்கு கொரோனா
காங்கேயம், தாராபுரத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
காங்கேயம்,
காங்கேயம், தாராபுரத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று வந்த கொரோனா பரிசோதனை முடிவில் காங்கேயம் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 2 பேருக்கும், நகர பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கும், மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டும், சிலர் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் நகராட்சி, ஊராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தாராபுரம்
தாராபுரத்தில் 4 இடங்களில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி சுகாதார வட்டார மருத்துவர் தேன்மொழி தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், நவீன் மற்றும் மருத்துவ குழுவினர் அலங்கியம், பொன்னாபுரம் பகுதியில் தினமும் 450 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மாதிரிகளை கோவை ஈ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகள் வந்தன. அதில் 5 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
Related Tags :
Next Story