பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்திய 16 மூட்டை போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது


பெங்களூருவில் இருந்து மதுரைக்கு  காரில் கடத்திய 16 மூட்டை போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2021 4:59 PM IST (Updated: 27 Aug 2021 4:59 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்திய 16 மூட்டை போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


சின்னாளபட்டி:
திண்டுக்கல்-மதுரை நான்குவழி சாலையில் ஏ.வெள்ளோடு பிரிவில் அம்பாத்துரை போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் வேகமாக வந்தது. அதை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இதில், காருக்குள் 16 மூட்டைகளில் போதை தரும் புகையிலை பொருட்கள் இருந்தது. 
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரை அம்பாத்துரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் காரில் வந்த 3 பேரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். 
கைது
இதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரேவன்குமார் (வயது 25), பெங்களூருவை சேர்ந்த பிரவீன் குமார் (25), தேவராஜ் (21) என்பதும், அவர்கள் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு போதை புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள்  3 பேரையும் கைது செய்தனர். மேலும் 16 மூட்டைகளில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 257 கிலோ போதை புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. 
இந்தநிலையில் போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த வெளிமாநில வாலிபர்களை கைது செய்த அம்பாத்துரை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்துபவர்களும், விற்பனை செய்பவர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றார். 


Next Story