கலெக்டர் வரவேற்பு
மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு கலெக்டர் வரவேற்பு
திருப்பூர்
சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மத்திய ரிசர்வ் காவல்படை மூலம் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ராஜ்கோட் காந்தியடிகளின் நினைவு இடம் வரை 2,700 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு 400 கிலோ மீட்டர் தூரம் கடந்து திருப்பூர் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் மாலை வந்தடைந்தது. பின்னர் நேற்று காலை அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் இருந்து பேரணியை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார். முன்னதாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்களுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்கள் சைக்கிள் பேரணி திருப்பூர் வந்து சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்துக்கு வந்தது. அங்கு குமரன் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மத்திய ரிசர்வ் காவல் படை உதவி ஆணையாளர் பயாஸ், மருத்துவ அதிகாரி பாலு, திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவி, மத்திய ரிசர்வ் படை வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு பேரணி கோவைக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story