சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்


சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 27 Aug 2021 6:47 PM IST (Updated: 27 Aug 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் பகுதியில் விலை உயர்வை எதிர்பார்த்து சின்ன வெங்காயத்தை விவசாயிகள் இருப்பு வைத்து வருகின்றனர்.

குடிமங்கலம்
குடிமங்கலம் பகுதியில் விலை உயர்வை எதிர்பார்த்து சின்ன வெங்காயத்தை விவசாயிகள் இருப்பு வைத்து வருகின்றனர்.
சின்ன வெங்காயம்
குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கிணற்றுப்பாசனம் மூலம் சொட்டுநீர் அமைத்து காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சின்னவெங்காயம் விலை ஏற்ற இறக்கங்களை பொறுத்து இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். குடிமங்கலம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபடுகின்றனர். 
விதை வெங்காயம்குறைந்த நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் விதை மூலம் நாற்றங்கால் அமைப்பது தவிர்த்து விதைவெங்காயம் சாகுபடி செய்கின்றனர்.இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு அதிகளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
பட்டறை வெங்காயம்
சின்ன வெங்காயம் சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது 
ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். வெங்காயசாகுபடிக்கு வெங்காயம், களையெடுத்தல் உரமிடுதல், மருந்து தெளித்தல் என ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவாகிறது. சின்ன வெங்காயம் 65 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.சின்ன வெங்காயத்தை 4 முதல் 5 மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும் இதனால் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்தும், விலை அதிகமான நேரங்களில் விற்பனை செய்ய முடிகிறது.  சின்ன வெங்காயம் சாகுபடி மூலம் விவசாயிகள் நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது. சின்ன வெங்காயம் சிவப்பு நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகிறது அறுவடை செய்யப்பட்டசின்ன வெங்காயம் இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னர் பட்டறைஅமைத்து இருப்பு வைக்கப்படுகிறது. வெங்காய சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story